புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் இருந்து வருகிறது. இது பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சிறிய, பெரிய நிறுவனங்கள், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் என்ற எந்த ஒரு வேறுபாடுகளும் இல்லை. ஒட்டுமொத்தமாக தொழிற்துறையை கொரோனா ஆட்டிப்படைத்து விட்டது.
தமிழக அரசு உத்தரவு
இந்த இழப்பிலிருந்து மீண்டு வர தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே ஒவ்வொரு முறையும் புதிய தளர்வுகள் அறிவிக்கும் போதும், சிறு குறு தொழில் நிறுவனங்களை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்து உத்தரவு பிறப்பித்து வருகிறது. இதன் காரணமாக பொருளாதார இழப்புகளில் இருந்து சிறு குறு தொழில் நிறுவனங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன.
தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்
இந்த சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களின் பாதிப்பை மேலும் சரிசெய்யும் வகையில் மேலும் தளர்வுகள் மற்றும் புதிய சலுகைகளை மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய உத்தரவின் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் 30 லட்ச ரூபாய்க்கும் குறைவான டெண்டரில் சிறு குறு நிறுவனங்கள் பங்கேற்கும் போது அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளன.
டெண்டர் தொகை தேவையில்லை
டெண்டருக்கான தொகை செலுத்த அவசியம் இல்லை. குறிப்பாக தமிழக அரசின் 'STARTUP TN' முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு நிறுவனங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மேலும் படிக்க:
100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் விரைவில் உயர்த்தப்படும்- தமிழக அரசு அறிவிப்பு!
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் பதிவிறக்கம்: