மத்திய அரசு சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது தண்ணீர் பிரச்சனையை ஆகும். இதனை குறித்து ஆராய மற்றும் நடவடிக்கை எடுக்க 255 அதிகாரிகளை மத்திய அரசு நியமனம் செத்துள்ளது.
இந்தியாவில் வறட்சி நிறைந்த 255 மாவட்டங்களில் வறட்சியான காரணத்தை ஆய்வு செய்யவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும், தண்ணீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்கவும் 255 அடங்கிய பொறியாளர்கள் குழுக்கள் அமைக்க பட்டுள்ளன.
மத்திய அரசின் 'ஜல சக்தி அபியான்' என்பதும் நீர்வள பாதுகாப்பு திட்டத்திம் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அறிமுக படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் அதிகாரிகள் அனைவரும் செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்களாக செயல் படுவார்கள்.
மத்திய, மாநில நீர்வளத்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், நீர்வள பொறியாளர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள், உட்பட பலரும் இந்த திட்டத்தின் கீழ் செயல் படுவார்கள். இவர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள குழுக்கள் சேர்ந்து செயல்படும் என கூற பட்டுள்ளது. ஆன்லைன்' மூலமாக ஜலசக்தி துறையின் செயலகத்தில், இவர்களது பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்வார்கள்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த 255 அதிகாரிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களை 1593 வட்டாரங்களாக பிரித்துள்ளனர். இவற்றில் 313 வட்டாரங்கள் கடும் வறட்சியை சந்திக்கும் மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
Anitha Jegadeesan
Krishi Jagran