பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை, வணங்கி பூஜிக்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று மற்றொரு முக்கிய நாள், மற்ற எந்த மொழியிலும் இல்லாத வகையில், நமக்கு 2 அடி வரியில், உலக பாடம் கற்றுக்கொடுத்த, அய்யன் திருவள்ளுவர் பிறந்த நாளும், இன்றாகும்.
மேலும், இந்த நன்நாளில் விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகள் சீவி விட்டு, வண்ணம் பூசி, அலங்கரித்து மகிழ்வர். அத்துடன் தொழுவத்தில் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுவர். இதன்பிறகு மாடுகளுக்கு உணவாக, பொங்கல் படையலிட்டு, மகிழ்ந்திடுவர். மாட்டுப்பொங்கல் பண்டிகையை உற்சாகத்தோடும், ஆரவாரத்துடனும் கொண்டாட இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு பேர் போன தளமான, ஆலங்கநல்லூர் ஜல்லிகட்டு, 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மதுரை மண்ணில் ஜல்லிகட்டு போட்டிகள் கலைகட்டின. மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. மொத்தம் 7 சுற்றுகளாக, வீரர்கள் களமிறக்கப்பட்டு, காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதில் இரண்டு மாடுபிடி வீரர்களிடையே கடுமையான போட்டி இருந்தது குறிப்பிடதக்கது.
இறுதிச்சுற்றின் முடிவில் அவனியாபுரம் கார்த்திக் 24 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்தார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக கொடுக்கப்பட்டது. 19 மாடுகளை பிடித்த முருகனுக்கு 2ம் பரிசாக, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சார்பில் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 12 காளைகளை பிடித்த பரத் குமாருக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இதைதொடர்ந்து, ஏராளமான இளம் பெண்களும் சிறுமிகளும் காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டு களம் காணடனர். இந்த நிலையில் தான் வளர்த்த காளை பிடிமாடாக ஆனதால் அமைச்சர் மூர்த்தி சிறப்புப் பரிசு வழங்க முன்வந்தும், அதனை வாங்க இளம்பெண் மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது. மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் யோகதர்ஷினி என்ற இளம் பெண், இவர் அருகில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். ஜல்லிக்கட்டு தடைக்குப் பிறகு, வெடித்த போராட்டம் தான் ஜல்லிக்கட்டு காளைகளின் மீது இவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளை அவிழ்ப்பதை பெருமையாகக் கருதும், யோகதர்ஷினி, சென்ற வருடம் நடைபெற்ற போட்டியில், அவரது மாடு களமிறங்கியதற்காக விழாக் குழிவினர் பரிசு வழங்க அழைத்தபோது. அதனைப் பெற மறுத்து காளையுடன் நடையைக் கட்டினார். இம் முறை, காளை பிடிமாடானதால், விரக்தியடைந்த யோகதர்ஷினி, காளையுடன் வெளியேறினார்.
மேலும் படிக்க:
SBI ஆட்சேர்ப்பு 2022: வேலை விவரம், ஜனவரி 28 கடைசித் தேதி!
15 நிமிடத்தில் குளிர்காலத்திற்கான முள்ளங்கி மற்றும் கேரட் ஊறுகாய்!