News

Friday, 22 October 2021 04:51 PM , by: T. Vigneshwaran

Gold loan Waiver In Tamil nadu

திமுக தேர்தல் அறிக்கையில்  முக்கியமான ஒன்று கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு. ஐந்து சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற அனைவரின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில், நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்சிக்கு வந்த பின் கடன் விவரங்களை ஆய்வு செய்தபோது தான் அதில் நடைபெற்ற ஊழல்கள் தெரியவந்தது.

நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஒரே நபர் பல வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் பல வங்கி ஊழியர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது என்ற பல சம்பவங்கள் இது போல் நடைபெற்றுள்ளன.

எனவே இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நகைக் கடன் பெற்றவர்களின் விவரங்கள் வங்கிகளால் சேகரிக்கப்பட்ட்டன.  இதனால் எப்போது கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்ற நபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி(I. Periyasamy) இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்றும், நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் 15 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 12 கோடி முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:

பெட்ரோல் லிட்டருக்கு 120 ரூபாயை எட்டியது! மக்கள் அவதி!

13 மாவட்டங்களில் மழையின் அட்டகாசம்! விவரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)