கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் அடகு வைத்துள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை ஸ்டாலின் அரசு நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தள்ளுபடித் தொகையை அரசு முன்கூட்டியேச் செலுத்தாவிட்டால், நகைக்கடனைத் தள்ளுபடி செய்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான செயலிலும் அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் பொது நகைக்கடன் வரும் 31-ம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
புதிய நிபந்தனைகள் (New terms)
-
நகைக்கடனை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
-
40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும், தள்ளுபடி பொருந்தாது.
-
அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி இல்லை.
-
ஆதார் எண்ணைத் தவறாக வழங்கியவர்கள், ரேசன் அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி பொருந்தாது.
-
அரசு விழாவில் தகுதியான 25 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்படும்.
-
இதன் மூலம், நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்பது தெளிவாகியிருக்கிறது.
மேலும் படிக்க...