News

Wednesday, 14 October 2020 05:56 PM , by: KJ Staff

Credit : Vikatan

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகமும் (University of Veterinary Medicine) ஒன்று. நாமக்கல் மாவட்டத்தில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருந்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு (Employment) அறிவிப்பு வெளிவந்துள்ளது. தற்போது, Veterinary Graduate பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனம் - TANUVAS
பணியின் பெயர் - Veterinary Graduate
பணியிடங்கள் - 01
கடைசி தேதி - 19.10.2020

கல்வித்தகுதி: 

பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கால்நடை மருத்துவ அறிவியல் (Veterinary Science) பிரிவில், இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதாவது B.V.Sc பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Credit : News18

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, அதிகபட்சமாக ரூ.40,000/- வரை சம்பளம் (Salary) வழங்கப்படும். விண்ணப்பிப்போர் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம்:

நேர்காணல் நடைபெறும் தேதி – 19.10.2020
இடம் – Department of Veterinary Gynaecology & Obstetrics, Veterinary College & Research Institute, Namakkal-637002.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களுடன், மேற்கண்ட முகவரியில் 19.10.2020 அன்று, நடைபெறும் நேர்காணலில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். தங்களின் அசல் ஆவணங்களோடு, தேவையான இதர சான்றிதழ்களையும் (Certificates), உடன் எடுத்து செல்ல வேண்டும். விண்ணப்பப்படிவம் (Application Form) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அத்தனையும் பூர்த்தி செய்து எடுத்து செல்ல வேண்டும்.
இணையதளம் : http://www.tanuvas.ac.in/vacancies.html

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

மாடுகளின் கண்களைத் தாக்கும், கண்புழு நோய்! முன்னெச்சரிக்கையும், தீர்வும்!

கால்நடை வளர்ப்போர் - மேய்ப்போர் பல வாரியத்தை, தமிழக அரசு உடனே அமைக்க வலியுறுத்தல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)