இந்தியாவில் முதன் முறையாக ‘திறன் தாக்கப் பத்திரம்’ என்ற திட்டத்தை தேசிய திறன் வளர்ச்சி கழகமான –என்.எஸ்.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.
இலக்கு
இது குறித்து என்.எஸ்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டன் இளவரசர் சார்லசின் அறக்கட்டளை உள்ளிட்ட சர்வதேச நிதியங்களின் கூட்டுறவுடன் 105 கோடி ரூபாய் முதலீட்டில், இந்தியாவில் முதன் முறையாக ‘திறன் தாக்கப் பத்திரம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு திறன் பயற்சி அளித்து வேலைவாய்ப்பு (Job) வழங்கப்படும். இதற்காக இலக்கு நிர்ணயிக்கப் படும்.இந்த இலக்கை எட்டினால் மட்டுமே, இத்திட்டத்தில் முதலீடு செய்த தனியார் நிறுவனங்களுக்கு, அவை முதலீட்டு செய்த தொகையுடன் ஊக்கத் தொகையை என்.எஸ்.டி.சி., வழங்கும்.
சிறப்பான பயிற்சி
இதனால் தனியார் நிறுவனங்கள் மிகுந்த அக்கறையுடன், வேலைவாய்ப்புள்ள துறைகளில் இளைஞர்களுக்கு சிறப்பான பயிற்சி (Training) அளிக்கும். இதன் வாயிலாக அடுத்த நான்கு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்கள் பயன் பெறுவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க