News

Monday, 26 July 2021 07:33 PM , by: R. Balakrishnan

Credit : Dinamalar

நாடு முழுவதும் இன்று கார்கில் 22 வது வெற்றிநாள் (Kargil Day) கொண்டாடப்படுகிறது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சென்ற, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்குள்ள நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.

வீரர்களுக்கு மரியாதை

இது போல் கார்கில் மாவட்டம் சென்ற ராணுவ தளபதி பிபின் ராவத், அங்கு மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். டில்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.

கார்கில் போர்

அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், நமக்கும், ஜம்மு - காஷ்மீரின் கார்கில் மலைப் பகுதியில், 1999ல், போர் நடந்தது. இந்த போர், 1999ம் ஆண்டு ஜூலை, 26ல் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வீரர்களை விரட்டி அடித்து, நம் வீரர்கள் கார்கில் மலை உச்சியில், நம் மூவர்ணக் கொடியை (National Flag) பறக்க விட்டனர். இந்த போரில், நம் வீரர்கள், 500 பேர் வீரமரணம் அடைந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26ம் தேதி, கார்கில் போர் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் சென்றார். அங்கு ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மறைந்த வீரர்கள் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.

கார்கில் நினைவு தினம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்: கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் தியாகம் என்றும் நினைவில் நிற்கும். அவர்களின் வீரம் நமக்கு ஊக்கம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க

டோக்கியோவில் தொடங்கியது ஒலிம்பிக்: இந்தியா சார்பில் 125 பேர் பங்கேற்பு!

ஆரோக்கிய நொறுக்குத்தீனியாக உடல்நலம் காக்கும் தாமரை விதை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)