விவசாயம் நலிவடைந்து வரும் வேலையில், அதற்கான எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் விவசாய கல்லுரி மாணவி கவிதா என்பவர் பெரும் சாதனை படைத்துள்ளார்.
லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகம் விவசாயம் தொடர்பான படிப்புகளை வழங்கி வருகிறது. நாட்டுப்புற பொருளியல், பூச்சியில், மரபியல், தோட்டக்கலை, மண் அறிவியல் போன்ற துறை சார்த்த வல்லுநர்களை உருவாக்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை சேர்த்த நாட்டுப்புற பொருளியல் மாணவி, கனடாவைச் சேர்ந்த மிகப் பெரிய விவசாய நிறுவனத்தில் உற்பத்தி மேலாளர் பதவி கிடைத்துள்ளது. அந்த நிறுவனம் பல்வேறு சுற்றுக்களாக நேர்காணல்களை நடத்தி இதில் இவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி உள்ளது.
1 கோடி வருமானம்
மானிடொபா என்ற அலுவலகம் கவிதாவிற்கு உற்பத்தி மேலாளர் பதவியைத் தந்து நமக்கு பெருமை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு வருமானமாக 1கோடி தர முன் வந்துள்ளது.
வேளாண் துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு கவிதா ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.இந்த மாத இறுதியில் நிறுவனத்தில் இனைய உள்ளார்.