தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்கள் தொடர் மழை காரணமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வருகிறது.
தொடர் மழை (Continuous Rain)
மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வராகநதி ஆற்றுக்கு வரும் கும்பக்கரை உள்ளிட்ட மற்ற வழித்தட ஆற்றில் தண்ணீர் சீராக வந்து கொண்டிருக்கிறது. இதனால் வராகநதி ஆற்றில் சீராக தண்ணீர் வந்து, வடுகபட்டி அருகே உள்ள ராஜவாய்க்கால் மூலம் பிரிந்து நல்லகருப்பன்பட்டி நாரணன்குளம் கண்மாய், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் ஆகிய கண்மாய்களுக்கு சீரான நீர்வரத்து உள்ளது.
தொடர்மழை காரணமாக கண்மாய்கள் நிறைந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழையால், இந்த ஆண்டு பயிர்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதால், விளைச்சல் நன்றாக இருக்கும்.
இனி வரும் நாட்களில், மழையளவு அதிகரித்தால் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு செயல்படுவதும் அவசியமாகும். பயிர்களுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி, அதிகளவு தண்ணீரில் இருந்து பாதுகாப்பதும் அவசியம்.
மேலும் படிக்க
இரசாயன ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்படும் வாழைப் பழங்கள்: உடலுக்கு கேடு!
குப்பையில் இருந்து உரம்: விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு செயல் விளக்கம்!