News

Thursday, 01 April 2021 06:23 AM , by: Daisy Rose Mary

மூட்டு வலி, எலும்பு வலிகள், தசை பிடிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாம் முதுமை காரணமாக எதிர்கொண்டு வருகிறோம். இன்றையை சூழ்நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் போதிய சமச்சீர் உணவுகள் இல்லாமல் ஏராளமான இளைஞர்களும் கூட இவ்வாறான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

வைட்டமின் D குறைபாடே இதுபோன்ற எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு காரணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் மக்கள் போதுமான சூரிய ஒளியைப் பெறத் தவறிவிடுவதே ஆகும் . இன்றைய சூழ்நிலையில் 50% க்கும் அதிகமான மக்கள் ஏ.சி-அலுவலகங்களில் பணியாற்றிவருகிறார்கள், இதனால் இயற்கையின் சிறந்த ஆற்றல் தரும் உறுப்புகளில் ஒன்றான சூரிய ஒளியை நம்மில் பலர் பெற தவறிவிடுகின்றனர்.

கோடை வெயில் உடலுக்கு அவசியம்

வாழ்க்கை முறைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளும் மாற்றம் கண்டுவருகிறது, எனவே நாம் அதை குறை சொல்ல முடியாது... அதகேற்ப மாற்றங்களை நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் சரி செய்யவேண்டும். அந்த வகையில் இந்த கோடைகாலத்தில் உங்கள் உணவில் சில பழங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் எலும்புகளின் வலிமையை கூட்ட முடியும்... 

வலுவான எலும்புகளை உங்களுக்கு அளிக்கும் 5 கோடை பழங்கள் இங்கே!

ஆப்பிள்:


ஆப்பிள்கள் கோடைகால சீசன் பழங்கள், ஆனால் இப்போதெல்லாம், நீங்கள் ஆண்டு முழுவதும் அவற்றைக் காணலாம். ஆப்பிள்கள் உங்கள் உடலை கால்சியம் மற்றும் வைட்டமின் சி மூலம் நிரப்புகின்றன. இவை இரண்டும் கொலாஜனை உருவாக்க மற்றும் எலும்புகளின் புதிய திசு உருவாவதைத் தூண்டுவதற்கு தேவை.

ஸ்ட்ராபெர்ரி

இந்த கோடையில், ஸ்ட்ராபெர்ரி பழங்களை தவறவிடாதீர்கள். அவை ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ளது. மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் கே ஆகியவை அடங்கியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலில் புதிய எலும்புகள் உருவாக்க உதவுகின்றன.

பப்பாளி

பொதுவாக பலருக்கும் பப்பாளி பழம் பிடிக்காது, குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால் பப்பாளி அதிக சத்தானவை. அவை வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஃபைபர் நிறைந்தவை. பப்பாளியில் இருக்கும் பப்பேன் (papain) எனப்படும் நொதி கொழுப்பு மற்றும் புரதத்தை கொண்டுள்ளது. அதனால்தான் இது வயிற்றில் எளிதானது மற்றும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. பப்பாளி ஒரு துண்டு தினசரி அல்லது மாற்று நாட்களில் உட்கொண்டால், உங்கள் உடல் மற்றும் எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.மேலும், அன்னாசிப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துகள் உடலை நடுநிலையாக்க உதவுகிறது. இதனால் எலும்புகளிலிருந்து கால்சியம் குறைபாட்டை நீக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபிக்கிறது.

தக்காளி

தக்காளி ஒரு பழம் அல்ல, ஆனால், காய்கறி வகைகளில் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் தக்காளியில் உள்ள லைகோபீன், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், சரிசெய்யவும் உதவுகின்றன. அவை எலும்புகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.

மேலும் படிக்க....

மாம்பழம் சாப்பிட்டால் முகத்தில் பருக்கள் அதிகரிக்குமாம்- மக்களே உஷார்!

சர்க்கரை நோயைத் தவிர்க்க பழம் தான் பெஸ்ட்! பழச்சாறு அருந்த வேண்டாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)