News

Friday, 09 October 2020 05:07 PM , by: Daisy Rose Mary

Credit : Dinamani

இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகள் நல நிதி வாரியம் அமைக்க அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கேரள அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த விவசாய நல நிதி வாரியத்தில், கேரளத்தில் 5 சென்ட் முதல் 15 ஏக்கர் வரையிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், குத்தகைக்கு வேளாண்மை செய்யும் விவசாயிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இணையலாம்.
உறுப்பினர்களுக்கான நிபந்தனைகள்

அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயிகள் பட்டியலில் தோட்டக்கலை பயிர்கள், மருத்துவப் பயிர்கள் பயிரிடுவோர், நர்சரி வைத்திருப்பவர்களும் அடங்குவார்கள். அத்துடன், மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, சிப்பி, பட்டுப்புழு, கோழி, வாத்து, ஆடு, முயல், கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்களும் இந்த வாரியத்தில் சேர முடியும்.

உறுப்பினர் கட்டண விபரம்

இவர்கள் நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அத்துடன் மாதம்தோறும் ரூ.100 வீதம் சந்தா செலுத்த வேண்டும். இந்தத் தொகையை ஆண்டுக்கு ஒரு முறையோ, 6 மாதங்களுக்கு ஒரு முறையோ கூட செலுத்தலாம். இதே அளவு தொகையை அரசும் தனது பங்களிப்பாக செலுத்தும்.

விவசாய நல நிதி வாரிய நன்மைகள்

நல வாரியம் சார்பில் விவசாயிகளுக்குத் தனிநபர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ உதவி, திருமண உதவி, பேறுகால உதவி, கல்வி உதவி, இறுதிச் சடங்கு உதவித் தொகைகள் வழங்கப்படும். பெண் உறுப்பினர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் திருமண உதவித் தொகையும் வழங்கப்படும்.
இந்த விவசாய நல நிதி வாரியத்தின் தலைவராக பேராசிரியர் பி.ராஜேந்திரனை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்

விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!

காற்று மாசுபாட்டை தடுக்க டிராக்டர்களுக்கும் நெறிமுறைகள் வகுப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)