காரீஃப் பருவ பயிர்கள் இது வரை 1,082.22 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிட இந்த ஆண்டு 7.15% கூடுதல் நிலப்பரப்பில் பயிரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரீஃப் பருவகாலப் பயிர்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு: 28.08.2020 வரையிலான காரீஃப் பருவகாலப் பயிர்கள் மொத்தமாக 1,082.22 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பயிரும் எந்த அளவிலான நிரப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன என்ற விவரம் கீழே தரப்படுகின்றன.
நெல் - Paddy
இந்த ஆண்டு 389.81 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 354.41 லட்சம் ஹெக்டேரில்தான் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. அதாவது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 35.40 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
பருப்புகள் - Pulses
இந்த ஆண்டு 134.57 லட்சம் ஹெக்டேரில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 128.65 லட்சம் ஹெக்டேரில் தான் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டிருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 5.91 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்கள் - oil seeds
இந்த ஆண்டு 193.29 லட்சம் ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 170.99 லட்சம் ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டிருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 22.30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளது.
பருத்தி - Cotton
இந்த ஆண்டு 128.41 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 124.90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டிருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 3.50 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனா நெருக்கடியிலும் காரீஃப் விதைப்பு அதிகரிப்பு!!
கோவை, சேலம் மாவட்ட விவசாயிகள் செப்.15க்குள் காப்பீடு செய்ய வேண்டும்