கிராமங்களில் உள்ள அணைத்து விவசாகிகளையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி இனி வரும் 100 நாட்களில் 1 கோடி விவசாகிகளை இணைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோர் கூறியுள்ளார்.
சிறு மற்றும் குறு விவசாகிகளுக்கு பிரதான மந்திரி கிஸான் சமந்த நிதி யோஜனா மற்றும் ஓய்வூதியம் திட்டத்தினை மத்திய அரசு அறிமுக படித்தி இருந்தது. திட்டத்தினை மேலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 6.92 கோடி விவசாயிகள் இணைத்துள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான விவசாய நிலங்கள் இதில் இணைந்துள்ளன.
கிஸான் கடன் அட்டைகள் வைத்திருப்பவர்கள் 1.6 லட்சம் வரையிலான விவசாய கடன் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையாக ரூ 6000/- அறிவிக்க பட்டுள்ளது. இதனை மூன்று தவணைகளாக அவர்களுது வங்கி கணக்கில் போட படவுள்ளது.
சிறு மற்றும் குறு விவசாகிகளுக்கு புதிய ஓய்வூதிய முதல் அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து விவசாகிகளும் இதில் இணையலாம். அவர்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக்கு இணையான தொகையினை அரசும் செலுத்தும். 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ 3000 /- ஓய்வூதியமாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
ஓய்வூதிய திட்டத்தில் விவசாகிகள் மாதம் தோறும் ரூ 100 செலுத்தினால் அரசும் இணையான தொகையினை ப்ரிமியம் ஆக செலுத்த உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 கோடி விவசாகிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளார்கள். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ 10,774.5 கோடி செலவாகும் என கணக்கிட பட்டுள்ளது. வெகு விரைவில் விவசாகிகள் குறை தீர்க்கும் இணையதள சேவையை அறிமுக படுத்த உள்ளது.
Anitha Jeageesan
Krishi Jagran