News

Monday, 23 December 2019 10:40 AM , by: Anitha Jegadeesan

உலகில் எண்ணற்ற தொழில்கள் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் முதன்மையானதும், உயிர் வாழ இன்றியமையாததுமான உழவு தொழிலினை குறித்து அய்யன் வள்ளுவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கூறியுள்ளார்.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் தான். நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். என்னினும் இந்நாள் குறித்த புரிதல் அனைவருக்கும் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதியினை தேசிய விவசாயிகள் தினமாக’  இந்திய கொண்டாடி வருகிறது. இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்ற சரண் சிங் விவசாயிகள் நலனுக்காவும்,  அவர்களுக்கு எதிராக செயல்படும் அடக்கு முறைகளை ஒடுக்குவதற்காகவும்,  ஜமீன்தாரி ஒழிப்புமுறை,  நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவது, ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’ என பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். குறைந்த மாதங்களே (7 மாதம்) பதிவில் இருந்தாலும் விவசாயிகளின் நலனுக்காக பெரிதும் பாடுபட்டார்.  சரண் சிங் அவர்களின் பிறந்த தினத்தையே விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.

பசுமை புரட்சியின் விளைவாக அதிகப் படியான உரங்களையும், நச்சு கொல்லிகளை பயன்படுத்தி மண்ணின் வளம் குறைந்து வருகிறது. எனவே விவசாயிகள் இயற்கை விவசாயத்தினை  நடை முறை படுத்த வேண்டும். இன்று பல விவசாயிகளும், இளம் தலைமுறையினரும் இயற்கை விவசாயத்தினை செய்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனினும் பெருகிவரும் விழிப்புணர்வினை மேலும் அதிகரிக்க உறுதி ஏற்போம். 

விவசாயிகள் நலனுக்காக

  • விளைப் பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்க வேண்டும்.
  • இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல் சுதந்திரமாக விளைப் பொருட்களை அனைத்து விவசாயிகளின் விற்க வேண்டும்.
  • பொது மக்களாகிய நாமும் இயன்ற வரை விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்க வேண்டும்.

இவற்றை நாம் அனைவரும் இந்நாளில் நடைமுறை படுத்த முயற்சிப்போம். அனைவருக்கும் எங்களின் விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள்.  

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)