News

Friday, 17 May 2019 06:12 PM

கிஷான் ரேஷன் ஷாப் என்பது விவசாய நியாய விலை கடை என்பதாகும். மத்திய அரசு இந்த கடைகளை நாடு முழுவதும் நிறுவி விவசாகிகளும், பொது மக்களும் பயன் பெறும் வகையில் மானிய விலையில் பொருட்களை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாகிகளும் மற்றும் பொது மக்களும் பயன் பெறுவதாகும். இடைத்தரகு எதுவும் இல்லாமல் நேரடி கொள்முதல் மற்றும் நேரடி விற்பனை ஆகும். இதன்படி உற்பத்திக்கு முன்பே பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும்.

தமிழகத்தில் 260  கடைகள் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு  வரவுள்ளது. முதல் கட்டமாக கோவை மாநகரில் 25 கடைகள் திறக்க பட்டுள்ளன. அதை தொடர்ந்து திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் இந்த  விவசாய நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளன.

வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் மானியத்துடன் இங்கு கிடைக்கும். அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், மசாலா பொருட்கள், சோப்பு போன்ற   அடிப்படை பொருட்களை 10% முதல் 19% மானியத்துடன் அரசு விற்கிறது. இந்த மானியத்தை பெற கைவசம் ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன்  அட்டை, விவசாய அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து செல்வது அவசியமாகும். ஒரு முறை பதிவு செய்தல் போதுமானது. பின்பு இந்தியாவில் எங்கு வேண்டுமாலும் பொருட்களை மானிய விலையில் வாங்கி கொள்ளலாம்.

முதல் தர பொருட்களையும், முன்னணி நிறுவனங்களின் பொருட்களையும் மானிய விலையில் பெற முடியும். அரசு வழங்கும் மானியத்தை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டை அவசியமாகும். இல்லாத பட்சத்தில் முழு விலையினை கொடுத்து பொருட்களை வாங்கும் படி அறிவுறுத்தி உள்ளது.  மானிய விலையில் வாங்குவதன் மூலம் மக்களும் விவசாக்கிகளும் பயன் பெறுவார்கள். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும். 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)