News

Wednesday, 18 December 2024 05:42 PM , by: Muthukrishnan Murugan

Komari Disease Vaccination camp

விருதுநகர் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற 05.01.2025 வரை நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வைரஸ் கிருமியால் உருவாகும் கோமாரி நோய் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பொருளாதார பாதிப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளிவிடும் நோயாகும். கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும். இந்நோய் கொடிய தொற்று நோயாகும். காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும்.

நோயினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்தி திறன் அதிக பாதிப்பு ஏற்படும். கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.

மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 5-வது சுற்று தடுப்பூசி போடும் பணி நிறைவு பெற்றுள்ளது.

தற்போது 6-வது சுற்று தடுப்பூசி போடும் பணி 16.12.2024 முதல் 05.01.2025 வரை 21 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இனாம்ரெட்டியாபட்டி கிராமத்தில் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1.76 இலட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு இந்த தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன்அறிவிப்போடு நடைபெறும் கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் முகாமில் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Read more:

ரபி பருவ பயிர்களுக்கான காப்பீடு- ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுக்கோள்

சிறு குறு விவசாயிகள் பவர் டில்லர் வாங்க 20 சதவீதம் கூடுதல் மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)