தற்போதைய சந்தை நிலைமைகள் சாதகமாக இருந்தால், கோடக் மஹிந்திரா வங்கி அதன் நிலையான வைப்பு (FD) விகிதத்தை மேலும் உயர்த்தலாம் என்று குழுமத் தலைவரும் நுகர்வோர் வங்கியின் தலைவருமான விராட் திவான்ஜி கூறினார்.
வட்டி விகிதம் உயர்வு(Interest rate hike)
இது குறித்து அவர், வங்கி தனது FD விகிதத்தை ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தியது. அந்த வகையில், 390 நாள்கள், 391 நாள்கள் முதல் 23 மாதங்கள் மற்றும் 23 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தப்பட்டது.
சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, வங்கி வழக்கமான குடிமக்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு 7% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது மூத்த குடிமக்களின் வைப்புத்தொகைக்கு 7.5% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்த உயர்வு ரெப்போ விகிதத்தில் மாற்றம் என்பதோடு இணைக்கப்பட்டுள்ளது எனவும் விராட் திவான்ஜி கூறினார்.
முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி தனது நிலையான வைப்பு விகிதங்களை வியாழன் அன்று 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. எச்டிஎஃப்சி வங்கியும் புதன்கிழமை தனது பெரும்பாலான சில்லறை கால வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 40-75 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேரந்தில் இலவச பயணம்: சூப்பர் அறிவிப்பு!
ஒரே ஒரு கிளிக் போதும்: PF பணம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள!