ஒடிசா மாநிலம் பாலாசூர் கருடா மைதானத்தில் கிருஷி சன்யந்திர மேளாவின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று வெற்றிகரமாக நடைப்பெற்றது. இன்றைய தினம் முற்போக்கு விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கண்காட்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஒடிசாவின் பாலசோரில் உள்ள கருடா மைதானத்தில் நேற்று முன்தினம்(மார்ச்-25) ”க்ரிஷி சன்யந்த்ரா மேளா 2023” ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தித் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, பாலாசோர் எம்பி, பிரதாப் சந்திர சாரங்கி, எஸ்பிஐ மேலாளர் (LHO), துருவா சரண் பாலா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது, ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொளி வாயிலாக நிகழ்வில் பங்கேற்றார்.
கிருஷி சன்யந்திர மேளா இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று நடைப்பெற்றது. முதல் அமர்வில் சிறந்த விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் விவரங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு STIHL/SANY இண்டஸ்ட்ரீஸால் நடத்தப்பட்டது. இரண்டாவது அமர்வை வாவ் மோட்டார்ஸ்/வேர் எனர்ஜிஸ் கிசான் நடத்தியது. மேலும், இந்நிகழ்வின் போது விவசாயத்துறையில் சிறப்பாக பங்கேற்றி மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கிய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடைபெற்ற இந்த கண்காட்சியில், பேராசிரியர் எஸ்.பி.நந்தா டீன், எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி, சி.யு.டி.எம். கஜபதி, ஸ்ரீ தபஸ் ரஞ்சன் பிரதான், டிடிஎம் நபார்டு, பாலசோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இத்துடன், கிருஷி ஜாக்ரன் நிறுவனர் எம்.சி.டோமினிக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் முற்போக்கு விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கண்காட்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விவசாயிகள் நவீன விவசாய முறைகள் பற்றிய அறிவையும் நுண்ணறிவையும் பெற இந்த கண்காட்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. பல விவசாய தொழில் முதலீட்டாளர்கள் புதிய விவசாய உபகரணங்கள், உரங்கள் மற்றும் விதைகளை காட்சிப்படுத்தும் ஸ்டால்களை அமைத்திருந்தனர். மேலும், வேளாண் துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்குவதோடு, விவசாயிகளுடன் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விவசாயிகள் மற்றும் விவசாய நிபுணர்கள் ஒன்றிணைந்து புதிய தொழில்நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் பிற வளர்ந்து வரும் போக்குகளைப் பற்றி விவாதிக்க ஒரு தளத்தை வழங்குவதன் மூலம், நேர்மறை மாற்றத்தை ஊக்குவிப்பதோடு, விவசாயத் துறையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது இந்த கிருஷி சன்யந்திர மேளா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
PM கிசான் திட்டத்தில் 42 கோடி முறைகேடு- இறந்த விவசாயி வங்கிக்கணக்கிலும் பணவரவு
குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி- இவர்களுக்கு தான் 1000 ரூபாய்.. முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு