நேற்றையத் தினம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு ஓசூர் ஒன்றியத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் இயற்கை உரம் தயாரிப்பு, ரோஜா செடி நடவு பணிகள், இராகி பயிரிடப்பட்டுள்ள நிலம், பட்டுவளர்ச்சித் துறை சார்பாக மானியம் பெற்ற பயனாளிகளின் செயல்பாடுகள் உட்பட பல்வேறு வேளாண் தொடர்பான பணிகளையும் மேற்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
ஓசூர் ஊராட்சி ஒன்றியம், அமுதகொண்டப்பள்ளியில் டேன்பிளோரா மையத்தில் ரோஜா செடி நடவு, மலர் உற்பத்தி, ஏற்றுமதி பணிகளுக்காக கொய்மலர் தயார் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., (29.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், அலசப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணாரெட்டி அவர்களின் விவசாய நிலத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் 2023-24 ன் கீழ், ரூ.6 ஆயிரம் மதிப்பில் ராகி இடுப்பொருட்கள் பெற்று இராகி பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., (29.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் ஊராட்சி ஒன்றியம், அலசப்பள்ளி கிராமத்தில் எஸ்எம்பி பையே ஆர்கானிக் உழவர் சங்கம் சார்பாக, வேளாண்மைத்துறை சார்பாக மானியம் பெற்று இயற்கை இடுபொருட்களான மண்புழு உரம், பஞ்சக்காவியம், ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீன் அமிலம் தயாரிப்பு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் (29.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாகலூரில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-23 ஆம் நிதியாண்டில் விவசாயி முனிரெட்டி அவர்கள் 50 சதவிகித மானியத்தில் 4000 சதுர அடியில் பசுமை குடில் அமைத்து மலர் சாகுபடி செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் பணி ஆய்வு:
ஓசூர் ஊராட்சி ஒன்றியம், ஈச்சங்கூர் ஊராட்சி, சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணரெட்டி அவர்கள் பட்டு வளர்ச்சித்துறை சார்பாக, மானியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் பெற்று பட்டுகூடு உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் ஊராட்சி ஒன்றியம், ஈச்சங்கூர் ஊராட்சி, தாசரப்பள்ளி கிராமத்தில், பட்டு வளர்ச்சித்துறை சார்பாக, விவசாயி திரு.முரளி என்பவர் தனது 1.5 ஏக்கர் விவசாய நிலத்தில் ரூ.1,50,500 மானியத்தில் மல்பெரி நடவு செய்யது பட்டு புழு வளர்ப்பு மேற்கொள்ளும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், எழுவப்பள்ளி கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக, ஷியாம் பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.435 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பசுமை கூடாரம், பூங்கொத்து கட்டும் அறை மற்றும் மலர்களுக்கான குளிர்சாதன கிடங்கு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் காண்க:
விவசாயிகளுக்கு ரூ.10.96 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன்- வேளாண் இடுப்பொருள் வழங்கல்
பப்பாளி பழத்தினை மதிப்பு கூட்டுமுறையில் காசு பார்க்கும் வழிகள்!