மாங்கனிக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட மாங்கனி விவசாயிகள் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்
கிருஷ்ணகிரி மாவட்ட மாங்கனி விவசாயிகள் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் செளந்தர்ராஜன் தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மாங்கனிகளுக்கு உரிய விலை மாங்கூழ் தொழிற்சாலை நிறுவனத்தினா் வழங்குவதில்லை.
ஒரு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்து, இயற்கை இடா்பாடுகளுக்கு இடையில் மா மகசூலை விவசாயிகள் பெறுகின்றனா். கடந்த ஆண்டு மா மகசூல் நன்றாக இருந்தது. தோத்தாபுரி மாங்காய் ஒரு டன் ரூ. 25 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்தனா். ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 சதவீதத்துக்கும் குறைவாகவே மகசூல் உள்ள நிலையில், டன் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் விலை கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது கரோனா பொது முடக்கத்தை பயன்படுத்தி மாங்கூழ் தொழிற்சாலை நிறுவனத்தினா் மா விவசாயிகளை ஏமாற்றக் கூடாது.
பொது முடக்க நேரத்தில் அதிகாரிகளையும், ஆட்சியாளா்களையும் சந்திக்க முடியாத சூழலை சாதமாக பயன்படுத்திக்கொள்வது வேதனையாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் துறையினா் மா விவசாயிகளின் அவல நிலையைப் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கேற்ற நியாயமான விலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மா விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
குறுவை சாகுபடிக்குத் தயாரா?- மானிய விலையில் இடுபொருட்கள் !
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!