மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறுவை விவசாய பருவத்திற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்க்கப்படும் நிலையில் தூர்வாரும் பணிகளும் தீவிரமாகியுள்ளன.
குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் மயிலாடுதுறை தாலுகாக்களில் ஏறக்குறைய 15,000 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் மற்றும் விதைப் பாத்திகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்த சாகுபடி பரப்பில் பாதிக்கு மேல் ஆழ்துளை கிணறுகளை தான் நீர் பாசன ஆதாரமாக நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குத்தாலம் தாலுக்காவில் உள்ள விவசாயிகள் மற்ற பகுதிகளை விட குறுவை விவசாய பணிகளை சிறப்பாக துவக்கியுள்ளனர். மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 39,000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8,000 ஹெக்டேரில் நடவு பணிகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேவையான அளவு உரங்கள் தயார் நிலையில் இருப்பு வைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என வேளாண் இணை இயக்குநர் ஜே.சேகர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்ய கடந்த ஆண்டு 17,500 ஹெக்டர் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 20,000 ஹெக்டேராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) வி.தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கால்வாய் பாசனத்தையே நம்பியுள்ளதால், கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருமருகல், கீழ்வேளூர் தொகுதிகள் போன்ற சில பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் உள்ளனர்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை பருவத்திற்கு ஆடுதுறை (ADT) நெல் ரகத்தையே விரும்புகின்றனர். ADT 43, ADT 45, ADT 63 வகைகளுக்கு நாற்றங்கால் வளர்க்கப்பட்டுள்ளது. மேலும் திரூர்குப்பம் (TKM) மற்றும் திருப்பதிசாரம் (TPS-5) நெல் ரகங்களை சாகுபடி செய்வதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேட்டூர் அணை திறப்பு:
இரு மாவட்டங்களிலும், ஏ மற்றும் பி வகை கால்வாய்களில் தூர்வாரும் நடவடிக்கையை நீர்வளத் துறை மேற்கொண்டு வருகிறது.
மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், சிறிய வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் வேளாண் பொறியியல் துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
pic courtesy: TH , N. Sai Charan
மேலும் காண்க:
G-20 மாபெரும் கடற்கரை தூய்மை பணி- தமிழகத்தில் 3 கடற்கரை தேர்வு