பசுந்தீவனம் இல்லாததால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது, விதைப்பு காலத்தில் விவசாயிகளுக்கு பணம் தேவை, ஆனால் வருமானம் கிடைக்கவில்லை. பசுந்தீவனம் கிடைக்காததால் பீகார் விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். ரபி பயிர்கள் விதைப்பு மற்றும் காரீப் பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. இந்த நேரத்தில் பணம் மிகவும் தேவை, ஆனால் தீவன பற்றாக்குறையால் பால் உற்பத்தி குறைந்து விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. தீவனப் பற்றாக்குறையால் விவசாயிகள் கறவை மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
பருவமழை பொய்த்து அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தீவனப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தினசரி பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, 8ல் இருந்து 10 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. முன்னதாக, லாக்டவுனில் கூட பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கால்நடைகளை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்
அறிக்கையின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பசுந்தீவனப் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கால்நடை விவசாயிகள் கூறுகையில், மீண்டும் மீண்டும் வெள்ளம் காரீஃப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் கறவை மாடுகளின் முக்கிய உணவான பசுந்தீவனத்தை இழந்துள்ளோம் என்கின்றனர். தண்ணீர் குறைந்த பிறகு மீண்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அறுவடைக்கு ஒரு மாதம் ஆகும் என்று கூறினர்.
ஜூன் நடுப்பகுதியில் மழை வெள்ளம் காரணமாக, விவசாயிகள் தங்கள் சேமிப்பில் இருந்த உலர் தீவனங்களையும், கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தையும் பயன்படுத்தியதாக அவர் கூறினர். தற்போது வெள்ளத்தால் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. கால்நடை வளர்ப்பாளர்கள் கூறுகையில், இந்த சூழ்நிலையில் கால்நடைகளை விற்க அல்லது சந்தையில் இருந்து அதிக விலை கொண்ட உலர் தீவனங்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உலர் தீவன விலையில் பெரும் உயர்வு
பசுந்தீவன தட்டுப்பாடு, உலர் தீவனங்களின் விலை உயர்வு ஆகியவை கால்நடை வளர்ப்போரையும் பாதித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் வரை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 500-600 வரை இருந்த உலர் தீவனம், பின்னர் குவிண்டாலுக்கு ரூ. 900 - 1,000 ஆக உயர்ந்துள்ளதாக கால்நடை விவசாயிகள் தெரிவித்தனர். டீசல் விலை உயர்வால் உலர் தீவனத்தின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்ட கால்நடை வளர்ப்போருக்கு மானியத்தில் உலர் கால்நடை தீவனம் வழங்காமல் அரசு உதவ தவறிவிட்டதாக கால்நடை விவசாயிகள் கூறுகின்றனர்.
பீகார் மாநில பால் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (COMFED) அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தில் பசுந்தீவனம் பற்றாக்குறையால் பால் உற்பத்தி 30-40 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 17-18 லட்சம் லிட்டராக இருந்த COMFED இன் தினசரி புதிய பால் கொள்முதல் 8-10 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. COMFED தனது தேவை-விநியோக இடைவெளியைக் குறைக்க மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் இருந்து பாலை வாங்குவதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க:
கால்நடைகளுக்குத் தீவனமாகும் தங்கரளி இலைகளில் விஷத்தன்மை - இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை!