சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பானது அனைத்து துறையினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த 8 வழி சாலைகளுக்கான வரைவு தயாரிக்க பட்டது. இத்திட்டம் அறிவிக்க பட்டதிலிருந்து விவசாகிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என் பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருந்தனர்.
மத்திய, மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்தனர். இதனால் இந்த திட்டத்தை பற்றி தேசிய அளவில் விவாதித்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து, பிற விவசாயிகளுடன், பாமக-வும் வழக்குத் தொடர்ந்திருந்தது. நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது.
நீதிமன்ற தடை
வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சில கருத்துக்களை முன் வைத்து இதற்கு தடை விதித்தது.
-
திட்டம் தொடர்பான கள ஆய்வுகளை மத்திய அரசோ, மாநில அரசோ செய்யவில்லை.
-
சாலை அமைக்கும் முன் அடிப்படையில் கவனிக்க வேண்டிய வன ஆய்வு, சுற்றுசூழல் ஆய்வு, வீடுகளின் ஆய்வு, மக்களின் கருத்து, என்று எதையும் செய்யவில்லை.
-
திட்டத்தை அறிவித்த அன்றே முன் அறிவிப்புகள் இன்றி பல மரங்களை வெட்டியுள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது,