நாம் வாழும் இப்பூவுலகிற்கு ஆபத்து மனிதர்களால் மட்டுமே ஏற்படும் என்பதற்கு அடுத்த உதாரணம் அமேசான் காடு.. பற்றி எரியும் தீ.. பேராபத்தை சத்தமில்லமால் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது பிரேசில் நாட்டு அரசு. நாம் சுவாசிக்கும் காற்றில் 20 சதவீதம் ஆக்ஸிஜன் உற்பத்தி அமேசான் காடுகளில் இருந்து கிடைக்கிறது. ஒட்டு மொத்த உலகிற்கும் ஆபத்தானது.
தீக்கிரையாகிக் கொண்டிருக்கும் அமேசான் காடு
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நாசா செயற்கைக்கோள் அமேசான் காட்டுப் பகுதியை நோக்கும்பொழுது புகை மண்டலமாக தெரிந்திருந்துள்ளது. அதை கூர்ந்து கவனித்தபோது விஞ்ஞானிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பனி மண்டலம் அல்ல அவை. கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்த புகை மண்டலம். இதனை பிரேசிலின் நாட்டிற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினர். உடனடியாக தடுக்க நடவெடிக்கை எடுக்கும்படி கேட்டது.
அமேசான் போன்ற காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையால் உருவாக்கப்பட்டவை. உலகத்தினுடைய நுரையீரல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறப்பு மிக்கது. அதற்குள் 3 மில்லியனுக்கும் அதிகமான மேல் பழங்குடி இன மக்கள், லட்சக்கணக்கான உயிரினங்கள் அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பிரேசில் அரசின் இத்தகைய நடவெடிக்கையால் பல்லாயிரக்கணக்கான உயிரனங்கள் மடிந்து வருகின்றன.
பிரேசில் மட்டுமின்றி இந்தியா இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாட்டு மக்களும் சுவாசிக்கக்கும் 20% ஆக்சிஜனை அமேசான் காடுகளில் இருந்து பெறப்படுகிறது. வியாபார நோக்கத்திற்காகவும், பண லாபத்திற்காகவும் அந்த நாட்டின் பிரதமரின் அனுமதியுடன் இத்தகைய செயலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அமேசான் காடு எரிவதால் நாம் பல பொக்கிஷங்களை இழந்து கொண்டு இருக்கிறோம். அரிய வகை மரங்கள், செடிகள், பல வகை அரிய உயிரினங்கள் என அனைத்தும் மடியும். 40 ஆயிரத்திற்கும் அதிகமான மர வகைகள் அழியக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகிலேயே 40,000 அரிய மரங்களை கொண்ட ஒரே காடு அமேசான் காடு மட்டும் தான். 1,300 வகை இனப் பறவைகள், 3000 மீன் வகைகள், 2.5 மில்லியன் பூச்சி வகை உயிரினங்கள் என அனைத்தும் அழிந்து போகும்.
மனிதகுலம் தோன்றும் முன்பே இயற்கை நமக்கு உயிர்வாழ்வதற்கு தேவையான நீர், நிலம், காற்று என அனைத்தையும் அளவில்லாமல் கொடுத்திருந்தது. பெரும்பாலான இயற்கை பேரழிவிற்கு மனிதன் மட்டுமே காரணமாகின்றான் என்பது வேதனைக்குரியது. இத்தகைய செயல்களால் துன்பப்பட போவது நாம் மட்டுமல்லாது நமது சந்ததியினரும்தான்...
Anitha Jegadeesan
Krishi Jagran