முழு சந்திர கிரகண நிகழ்வு செவ்வாய்க்கிழமை நவம்பர் 8 நிகழ உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்த நிகழ்வைக் காண வாய்ப்புகள் உள்ளன.
ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பிசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து சந்திர கிரகணத்தைக் காண முடியும்.
முழு சந்திரன் தோன்றும் நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை, இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் காண இயலாது என வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், முழுமையான மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணத்தின் பிற்பகுதி நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகர்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியிலிருந்து காண இயலும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சந்திர கிரகணத்தின் பிற்பகுதி நிலைகள் மற்றும் முடிவு மட்டுமே நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காணக் கூடியதாக இருக்கும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும். பின்னர், பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைகிறது.
நாகாலாந்தின் கோஹிமாவில் மட்டுமே சந்திர கிரகணத்தின் உச்ச நிலை மாலை 4.29 மணியளவில் காணலாம். தமிழ் நாட்டில் சென்னை மாநகரத்தில், மாலை 5.39 மணியளவில் சந்திர கிரகணத்தைக் காண இயலும்.
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இங்கு காணப்படாது
நவம்பர் 8 ஆம் தேதி, தென்மேற்கு ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் இக்கிரகணத்தை காண முடியாது.
சந்திர கிரகணத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை?
இந்த ஆண்டின் கடைசி கிரகணம் இதுவாகும். சந்திர கிரகணம் இந்து கிலேண்டர்படி, இந்தியாவில் கார்த்திக் பூர்ணிமா அன்று தெரியும், இந்த காரணத்திற்காக அதன் சூதக் காலம் செல்லுபடியாகும். இவ்வாறான நிலையில் கிரகணத்திற்கு 09 மணித்தியாலங்களுக்கு முன்பிருந்தே சூதக காலம் ஆரம்பமாகும். சூதக் காலம் புனித நூல்களில் அசுபமாகக் கருதப்படுகிறது, எனவே சூதக் காலத்தில் வழிபாடு, மத சடங்குகள் மற்றும் மங்களகரமான வேலைகள் செய்யப்படுவதில்லை. கோயிலின் கதவுகள் மூடப்பட்டுள்ளன. கிரகணத்தின் போது உணவை சமைப்பதும் சாப்பிடுவதும் இல்லை. கிரகணத்தின் போது மந்திரங்கள் சொல்லி கோயில் வாயில்கள் மூடப்படுகின்றன, கிரகணம் முடிந்ததும், கங்கை நீரால் நீராடிவிட்டு மற்றும் தானம் செய்யப்படுகிறது. கிரகணத்தின் முடிவில் வீடு முழுவதும் கங்கை நீர் தெளிக்கப்படுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது
- சந்திரகிரகணத்தின் போது எந்த ஒரு சுப காரியம் செய்யவோ அல்லது தெய்வ வழிபாடு செய்யவோ கூடாது.
- சந்திர கிரகணத்தின் போது உணவு சமைக்கவோ சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.
- சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தைப் பார்க்கவோ, வீட்டை விட்டு வெளியே செல்லவோ கூடாது.
- சந்திர கிரகணத்தின் போது துளசி உட்பட மற்ற மரங்கள் மற்றும் செடிகளை நடக்கூடாது.
சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்
- கிரகணம் தொடங்கும் முன், அதாவது சூதக் காலம் இருக்கும் போது, ஏற்கனவே உடைந்த துளசி இலைகளை உணவுப் பொருட்களில் வைக்க வேண்டும்.
- கிரகணத்தின் போது, உங்களுக்கு பிடித்த தெய்வங்களின் பெயர்களை நினைவில் கொள்ள வேண்டும்.
- கிரகணத்தின் போது அதன் பலனை குறைக்க சந்திரன் தொடர்பான மந்திரங்களை உச்சரிப்பது நன்மை பயக்கும்.
- கிரகணம் முடிந்ததும் வீடு முழுவதும் கங்கை நீரை தெளிக்க வேண்டும்.
ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தின் தாக்கம்
மேஷம்- இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் உங்கள் ராசியில் நடக்கிறது. இந்த கிரகணம் உங்களுக்கு அசுபமாகவும் தீங்காகவும் இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும்.
ரிஷபம்- இந்த சந்திர கிரகணத்தால், பண நஷ்டம் ஏற்படும் மற்றும் கடின உழைப்பைச் செய்ய வேண்டியிருக்கும்.
மிதுனம்- இந்த சந்திர கிரகணம் உங்களுக்கு நன்றாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் நல்ல பலன்களும் நல்ல லாபமும் கிடைக்கும்.
கடகம்- வேலையில் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சிம்மம்- சில நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல பதவியைப் பெறலாம்.
கன்னி- இந்த ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தால் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
துலாம்- பிரச்சனைகள் வரலாம். பண இழப்பு உங்கள் வேலையை கெடுத்துவிடும். கவனமாக நடக்கவும்.
விருச்சிகம் -நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் இந்த கிரகணம் உங்களுக்கு நிறைய சேதத்தை கொடுக்கலாம். கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு- நீங்கள் சில உடல்நல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
மகரம்- இந்த ராசிக்காரர்கள் பண இழப்பு, வழக்குகளில் நஷ்டம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
கும்பம்- இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் மற்றும் நற்பலன்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
மீனம்- அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க:
70% மானியம்: கால்நடை காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு!
புதிய வேளாண் கருவிகள் கண்டுபிடிப்புக்கு பரிசு! இதோ முழு விவரம்