மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 March, 2023 2:44 PM IST
Latest Updates from TNAU | Kopari coconut prices remain stable information

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, தேங்காய் மற்றும் கொப்பரைக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

வர்த்தக மூலகங்கள், வரும் மாதங்களில் வர கூடிய பண்டிகை காலம் உள்நாட்டு சந்தையில் தேங்காயின் தேவையை அதிகரிக்கும். ஆனால் நடப்பு பருவத்தின் அதிக உற்பத்தி தேங்காயின் விலையை நிலையாக வைக்கும் என தெரிவிக்கின்றன. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அக்டோபர் - டிசம்பர் 2022 வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.13 முதல் 14 வரை இருக்கும் மற்றும் தரமான கொப்பரையின் பண்ணை விலை ரூ.77 முதல் ரூ.80 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் குறிப்பிடப்பட்ட சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

2.TNAU இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் மூலம் நேரடியாக (DIRECT MODE) வரும் 7.10.22 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 - 1.00  மற்றும் 2.00 - 4.30 வரை இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, இதற்கான பயிற்சி கட்டணத்தை செலுத்தும் முகவரி பேராசிரியர் மற்றும் தலைவர் (PROFESSOR AND HEAD) ரூ.590/-,(ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கிளை) (SBI-TNAU BRANCH - A/C No.38918523789, IFSC Code - SBI0002274) பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில்நுட்ப கையேடு வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

3.வேளாண் பட்டதாரிகள் வேளாண் தொழில்முனைவோர்களாக வாய்ப்பு

விருதுநகர்‌ மாவட்டத்தில்‌ 132 பஞ்சாயத்துக்களில்‌ கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ (KAVI-ADP) திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில்‌: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்‌ பெறியியில்‌ இளநிலை பட்டப்பிரிவில்‌ சான்று பெற்ற இளம்‌ தொழில்‌ முனைவோருக்கு அக்ரி கிளினிக்‌ அல்லது வேளாண்‌ சார்ந்த தொழில்‌ தொடங்குவதற்கு பட்டதாரி இளைஞர்களுக்கு 25% மானியமாக அதிகபட்ச நீதி உதவியாக ரூ.1,00,000/ பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்‌. தகுதியுடைய தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள் வேளாண்மை/ தோட்டக்கலை/ வேளாண் பொறியியல் தொழில் படிப்புகளான சான்றிதயவ், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்புக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வேளாண் தொழில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதற்கான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணங்களுடன் Agrisnet வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திடவும், தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு விருதுநகர் வேளாண்மை இனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

4.சேலம் கால்நடை மருத்துவ பல்கலை சார்பில் மாநில அளவிலான இணையவழி காணொளி கருத்தரங்கு

சேலம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது கறவை மாடு, ஆடு, வெண் பன்றி மற்றும் முயல் போன்ற கால்நடைகள் வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் என்ற மாநில அளவிலான விவசாயிகளுக்கான இணையவழி காணொளி கருத்தரங்கை 26.அக்டோபர்.2022 முதல் 28 அக்டோபர்.2022 வரை கூகுள் மீட் மூலம் நடத்த உள்ளது. கருத்தரங்கு 3 நாட்கள் (26 முதல் 28 வரை) நடைபெறும். கட்டணமாக ரூ.200 செலுத்த கடைசி நாள் : 21.அக்டோபர்.2022. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

5.முட்டை விலை ரூ.4.10 ஆக சரிவு 

நாமக்கல் மண்டலத்தில் 1100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. தற்போது புரட்டாசி மாதம் மற்றும் நவராத்திரி பண்டிகைகள் நடைபெறுவதால் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்ப்பது வழக்கமாகும். எனவே, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பண்ணைகளில் ரூ.4.50 ஆக இருந்த ஒரு முட்டை கொள்முதல் விலை கடந்த வாரம் ரூ.4.30 ஆக சரிந்தது. இதைத் தொடர்ந்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டை விலை ரூ. 4.10 ஆக நிர்ணயம் செய்துள்ளது.
மேலும் படிக்க:
English Summary: Latest Updates from TNAU | Kopari coconut prices remain stable information
Published on: 04 October 2022, 02:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now