
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக குமரிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஓரு சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேபோன்று டெல்டா மாவட்டங்களிலும் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

குமரிக்கடலில் மையம் கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றானது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக கூடும் என கூறப்பட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran