News

Wednesday, 28 August 2019 10:33 AM

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக   சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான முதல் கன மழை வரை பெய்யும் என அறிவித்துள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அவ்வப்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால், தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தேவாலாவில் அதிகபட்சமாக 7 செ.மீ., வரையும்,  சின்னக்கல்லாறு என்ற இடத்தில் 6 செ.மீ., மழையும்  பதிவாகியுள்ளது.  வரும் 29 ஆம் தேதி வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதால், தெற்கு தீபகற்ப பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)