இந்தியாவின் லாவெண்டர் தலைநகராகவும் வேளாண் ஸ்டார்ட்அப் இடமாகவும் பதேர்வா உருவெடுத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பதேர்வா பள்ளத்தாக்கில் இரண்டு நாள் "லாவெண்டர் திருவிழாவை" நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த விழா CSIR-IIIM-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் நிறுவனத்தின் 'ஒரு வாரம் ஒரு ஆய்வக பிரச்சாரத்தின்' (one week one Lab campaign) ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இது லாவெண்டர் சாகுபடியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் உள்ளூர் சமூகத்தில் அதன் தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
நிலம் மற்றும் காலநிலை அடிப்படையில் லாவெண்டர் சாகுபடிக்கு பதேர்வா பகுதியானது சிறந்த காலநிலை சூழ்நிலையை கொண்டுள்ளது. லாவெண்டர் சாகுபடியின் தாக்கம் குறித்துப் பேசிய ஜிதேந்திர சிங், இது வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளுக்கான திறனைக் கொண்டுள்ளது. மேலும் தொழிற் வளர்ச்சிக்கான புதிய வழிகளையும் தொழில் முனைவோர்களுக்கு வழங்குகிறது.
சிஎஸ்ஐஆர்-அரோமா மிஷன் மூலம் பதர்வாவின் தோடா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (CSIR-IIIM) மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"லாவெண்டர் சாகுபடி பல விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது, அவர்களுக்கு அதிக வருமானம் மற்றும் பொருளாதார உறுதித்தன்மையினை வழங்குகிறது" என்று அமைச்சர் கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் மிதமான வெப்ப மண்டல பகுதிகளில் லாவெண்டர் சாகுபடியை ஊக்குவிப்பதில் சிஎஸ்ஐஆர்-அரோமா மிஷன் தீவிரமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதும், விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இதன் முதன்மையான குறிக்கோளாகும்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லாவெண்டர் செடிகளை CSIR-IIIM வழங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாவெண்டர் பயிர்களை பயிரிடுதல், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அனைத்து தொழில்நுட்பப் அறிவுரைகளையும் நிறுவனம் வழங்கி விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறது.
லாவெண்டரின் செயலாக்கத்திற்கு உதவ, CSIR-IIIM ஆனது ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் பல்வேறு இடங்களில் 50 வடிகட்டும் அலகுகளை நிறுவியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"ஜம்முவின் மிதவெப்ப மண்டலங்களில் உள்ள சிறு மற்றும் குறு மக்காச்சோள விவசாயிகள் லாவெண்டர் சாகுபடியை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டது இப்பகுதியில் ஒரு புதிய தொழில்துறையை நிறுவ வழிவகுத்தது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போது லாவெண்டர் பயிரிடுகின்றனர்,” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
pic courtesy: Dr Jitendra Singh (twit)
மேலும் காண்க:
பேருந்தில் டிக்கெட் எடுக்க QR வசதி- இனி சில்லரை பஞ்சாயத்து இல்ல!
மோடியின் 9 வருட ஆட்சியில் விவசாயிகளுக்காக உருவாக்கிய 9 திட்டங்கள்!