இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் (International Womens day) கொண்டாடப்படுகிறது. இன்றைய தொழில்நுட்ப உலகில், அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண்கள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சக குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நம் நாட்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய சாதனைகளை அமைத்து வருகின்றனர். பாலின நீதியை மேம்படுத்துவதற்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை (Inequality) அகற்றுவதற்கும் கூட்டாக தீர்மானிப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி:
நம் பெண்களின் பல சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்கள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்.
தமிழக முதல்வர் பழனிசாமி:
தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கோடையில் நாட்டுக்கோழிகளை பராமரிப்பதன் அவசியம்!
ஈஷா மஹாசிவராத்திரி: இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக கலந்துகொள்ளுங்கள்