சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடமை
சென்னை, நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை அமிர்தப் பெருவிழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதன் ஒருபகுதியாக, தங்கள் இன்னுயிரை ஈந்து, சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த தியாகிகளை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்க வேண்டியது நம் அனைவிரின் கடமை.
கொடி ஏற்றுதல்
இதன்படி, 75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் 13ம் தேதி முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
வேண்டுகோள்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் நேற்று தேசிய கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய டுவீட்டர் பதியில் பதிவிட்ட வீடியோவில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை நாம் அனைவரும் நமது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க...