புதிய மின்இணைப்பு பெறும் நுகர்வோர் இ.எல்.சி.பி.,' (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) என்ற உயிர்காக்கும் கருவியை பொருத்துவது அவசியம் என, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த புதிய உத்தரவால், மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முடியும்.
புதிய மின் இணைப்பு (New Electricity Connection)
தேனி மேற்பார்வை பொறியாளர் சண்முகா கூறியதாவது: வீடுகளில் 240 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கிறது. இதில் 40 மில்லி ஆம்ஸ் மின் அழுத்தம் நம் உடலில் பாய்ந்தாலே இருதய துடிப்பு நின்று உயிரிழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க நம் வீடுகளில், சிங்கிள் பேஸ் மின் இணைப்புக்கு ரூ.1300 மதிப்புள்ள இ.எல்.சி.பி., (40 ஆம்ஸ்) மின்திறன் கொண்ட கருவியையும், மும்முனை மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள இ.எல்.சி.பி., (63 ஆம்ஸ்) மின் திறன் கொண்ட கருவியையும் பொருத்திக் கொள்ளலாம்.
கூடுதல் மின்திறன்களுக்கு ஏற்ப கருவிகளும் உள்ளன. மின் விபத்து ஏற்பட்ட உடன், பியூஸ் கேரியர் தடை செய்யப்பட்டு மின் வினியோகத்தில் தடை ஏற்படும். இதனால் அசம்பாவிதம் தவிர்த்து அடுத்த நொடியிலேயே உயிர் காக்கப்படும்.
மின்வாரியம் மின் இணைப்பு வழங்கும்போதே இந்த கருவி பொருத்துவது கட்டாயம் என அறிவுறுத்தி உள்ளது. வீடுகள், தொழிற்சாலைகளுக்கு இது பொருந்தும்.
மேலும் படிக்க
இரவில் அடிக்கடி மின் வெட்டு: என்ன செய்யப் போகிறது மின்சார வாரியம்?
சூரியனில் அதிகரிக்கும் கரும்புள்ளிகள்: வானியற்பியல் விஞ்ஞானி எச்சரிக்கை!