சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018 ஆக உள்ளது. இதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507 ஆக விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருவதால், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதம் இருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகுகிறார்கள்.
எண்ணெய் நிறுவனங்கள்
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருவதால், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாற்றி அமைக்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எரிவாயு சிலிண்டர் விலை உச்சத்தை எட்டியது. கடந்த பிப்ரவரியில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967 ஆக இருந்தது.பிறகு மார்ச் மாதத்தில் வீட்டு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்ந்து ரூ.1015.50 ஆக இருந்தது.
உள்ளூர் வரிகள் காரணமாக, எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும். இருப்பினும், சரக்குக் கட்டணத்தால் ஏற்படும் அதிக விலையை ஈடுசெய்ய, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, மத்திய அரசு சிறிய மானியத்தை வழங்குகிறது. அரசு மானியத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களைப் பெற தகுதியுடையது. அரசு வழங்கும் மானியத்தின் அளவு மாதத்திற்கு மாதம் மாறுபடும்.
எல்பிஜி மற்றும் ஏடிஎஃப் விலைகள், ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பெஞ்ச்மார்க் எரிபொருளுக்கான சராசரி சர்வதேச விலை மற்றும் முந்தைய மாதத்தில் அந்நியச் செலாவணி விகிதத்தின் அடிப்படையில் திருத்தப்படும்.
இந்நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மேலும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டதை அடுத்து ரூ.1,018க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507 ஆக உள்ளது. தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:
LPG Price Today: 850 ரூபாயாக உயர்ந்த எரிவாயு சிலிண்டர் விலை , அதிர்ச்சி அடைந்த மக்கள்!