News

Wednesday, 31 March 2021 04:14 PM , by: Daisy Rose Mary

மத்திய-மாநில அரசின் அனைத்து திட்டங்களுக்கும் அதியாவசிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. அந்த ஆதார் அட்டையை வங்கிக் கணக்கு மற்றும் பான் அட்டையுடன் இணைப்பதும் அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.  

பான் கார்டுடன் ஆதாரை எண்ணை இணைப்பதற்கு கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதியே கடைசி நாள் என அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் கொரோனா ஊரடங்கு காரணங்களால் இதனை இணைப்பதற்கான காலகெடு பல முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் பான் அட்டையுடன் ஆதாரை எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்றைக்கு இணைக்கவில்லை என்றால் நாளை முதல் உங்களுடைய பான் கார்டு பயன்பாட்டில் இல்லை, அதாவது 'Inoperative' என வகைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான பான் கார்டு இல்லாமல் இருப்பது 10,000 ரூபாய்வரை அபராதத்திற்கு வழிவகுக்கும், எனவே, விரைவில் பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் வீட்டில் இருந்தபடி ஆதார அட்டையை பான் கார்டுடன் எளிதில் இணைக்கலாம்...

உங்கள் ஆதார் அட்டையுடன் (Aadhaar Card) நீங்கள் இன்னும் PAN கார்டை இணைக்கவில்லை என்றால், இப்போது உங்களுக்கு அதிக நேரம் இல்லை. சிறிது நேரம் எடுத்துக்கொள்வதன் மூலம், உங்கள் வீட்டுத் இருந்தபடியே பான் கார்டை (PAN Card) ஆதார் அட்டையுடன் இணைக்கலாம். அதற்கான செயல்முறையையும் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

PAN Card = Aadhar Card இணைக்கும் வழிமுறை

  • மத்திய அரசின் அதிகாரப்பூர்வதளமான வருமான வரி தளத்தில் உங்களின் முறையான தகவல்களுடன் பார்வையிடுங்கள் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html

  • உங்கள் Aadhaar மற்றும் பான் எண் மற்றும் பெயர் மற்றும் முகவரியின் சரியான தகவல்களை வழங்கவும்

  • விவரங்கள் சரியாக இருக்கும்போது உங்கள் ஆதார் அட்டை PAN உடன் இணைக்கப்படும்

  • மெசேஜ் இன் உதவியுடனும் பான் கார்டை ஆதார் உடன் இணைக்க முடியும்

  • பெரிய எழுத்தில் UIDPN ஐ கிளிக் செய்து உங்கள் ஆதார் எண் மற்றும் பான் எண்ணைத் கிளிக் செய்க. இந்த 567678 அல்லது 56161 க்கு SMS அனுப்பவும்

  • சிறிது நேரத்தில், ஆதாரிலிருந்து பான் கார்டை இணைக்கப்பட்ட செய்தி உங்கள் மொபைலில் வரும்

பான் கார்டு ஏன் முக்கியம்?

வங்கி கணக்கைத் திறப்பது, பரஸ்பர நிதி அல்லது பங்குகளை வாங்குவது மற்றும் ரூ .50,000 க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் செய்வது போன்ற பல நோக்கங்களுக்காக பான் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும். இருப்பினும், இதுபோன்ற செயல்படாத பான் கார்டுகள் அனைத்தும் பான் அட்டை வைத்திருப்பவர், பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பை மேற்கொள்ளும்போது செயல்படும். 

இந்த கார்டை வாங்கினாலே உங்களுக்கு ரூ.2 லட்சம் இலவச இன்சூரன்ஸ்! SBI அறிவிப்பு!

மூத்த குடிமக்களுக்கு ஓர் நற்செய்தி! FD வட்டிச் சலுகை நீட்டிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)