எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் நாளை துவங்க உள்ளன. தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி, இம்மாதம் 1ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற நர்சரி வகுப்புகளுக்கான பள்ளிகளையும், பிளே ஸ்கூல் எனப்படும் மழலையர் பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
நர்சரி பள்ளிகள் (Nursery schools)
நாளை முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த பள்ளிகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிப்பதால், கொரோனா தொற்று மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட உள்ளது. பள்ளிகளில், குழந்தைகள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு உற்சாகமூட்டும் பாடங்களை நடத்த, தொடக்க கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அரசு பள்ளிகள் சிலவற்றிலும், அவற்றின் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் உள்ளன. அவற்றில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில், பள்ளிகள் ஓட்டு சாவடிகளாக உள்ளதால், ஓட்டுப்பதிவு முடிந்து, 21ம் தேதி முதல் வகுப்புகளை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் படிக்க
விபரீத விளையாட்டு: சேலையை எடுக்க மகனை 10வது மாடியில் இருந்து கீழே இறக்கிய பெண்!