நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள், இணையதளம் மூலம் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க தங்களுக்கான வாக்குச்சாவடியை இணையத்திலேயே அறிந்து கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இணையத்தில் வாக்குச்சாவடி (Polls Through Website)
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்காக வார்டு வாரியாக பிரதான மற்றும் துணை வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான http://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர் எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதே இணையதளத்தில், ‘உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள்' என்ற வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும் மேற்படி விவரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாக்காளர்களை கவர பல்வேறு புது யுக்திகளை கையாள வேட்பாளர்கள் தயங்கவில்லை. வேட்பாளர்கள் எந்த விதத்தில் ஓட்டு சேகரித்தாலும், பொதுமக்களின் முடிவை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். யாருக்கு இந்த தேர்தல் சாதகமாக அமையும் என்பதை தற்போது கணிப்பது அசாத்தியமானது.
மேலும் படிக்க
உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுக்காக சாணம் அள்ளிய வேட்பாளர்!
வேட்பாளர்களுக்கு தேர்வு வைத்த கிராம மக்கள்: ஒடிசாவில் ருசிகரம்!