ஒமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த ஏதுவாக, நெதர்லாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் (Lockdown) அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
கொரோனா வைரஸ் தொற்றுக்கே உலக மக்கள் ஆடிப்போனதுடன், ஆயிரக்கணக்கானோரின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. இதன் ஆட்டம் இன்னும் முடிவுக்கு வருமுன்பே, ஒமிக்ரான் வைரஸ் அலற வைத்து இருப்பதுதான், மானுட சோகம்தான்.
உருமாற்றம் (Transformation)
கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமிக்ரான் தென்படத்தொடங்கியது. இது 50-க்கும் மேற்பட்ட உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது, அதிபயங்கரமானது.
70 மடங்கு வேகம் (70 times the speed)
உடனடியாக , ஜெனீவாவில் கூடி இந்த வைரஸ் பற்றி விவாதித்த உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, 26-ந் தேதியே இந்த வைரஸ், கவலைக்குரிய திரிபாக (VOC) அறிவித்தது. இந்த ஒமிக்ரான், டெல்டா வைரசுடன் ஒப்பிடுகிறபோது 70 மடங்கு வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
இதையடுத்து,உலகமெங்கும் ஒமிக்ரான் வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.இந்நிலையில் தற்போது நெதர்லாந்தில், கொரோனா ஐந்தாவது அலை பரவி வருகிறது. நாளுக்கு நாள் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் வருகிற ஜனவரி 14ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்களுக்குத் தடை (Ban on celebrations)
இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பொது முடக்கம் (Lockdown)
ஒமிக்ரான் பரவல் காரணமாக, பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன, பல்வேறு நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகவுள்ளது.
மேலும் படிக்க...
உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க இதைப் பண்ணுங்க!