News

Thursday, 23 May 2019 02:42 PM

உலகின் மிக பெரிய மக்களாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11  மாதம் தொடங்கி மே 19 தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலானது ஏழு கட்டங்களாக நடை பெற்றது. இன்று காலை முதல் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

90 கோடி மக்கள் தகுதியுள்ள வாக்காளர்களாக இருந்தனர். அதே போன்று முதலாம் தலைமுறை  வாக்காளர்களாக 10 லட்சம் பேர் வாக்களிக்க பதிவிட்டிருந்தனர். ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில்  67% வாக்குகள் மட்டும் பதிவாகியிருந்தன.

தேசிய அளவில் மாபெரும் கட்சிகளான பா ஜ க மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியானது ஆட்சியினை தக்க வைத்துக்கொள்ள  போராடி வருகிறது.  தேர்தலுக்கு பின்பு நடத்த பெரும் பலான கருத்துக்கணிப்புகள்  எல்லாம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே  இருந்தன. 

இன்று காலை முதல்  வெளிவருகின்ற முடிவுகள்  ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்து வருகிறது. காங்கிரஸ் போன்ற பிரதான எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது எனலாம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், கர்நாடக மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கூட மத்தியில் ஆளும் பா  ஜ க அரசு முன்னிலையில் இருந்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை புதிய ஆட்சி மற்றும் நிகழ உள்ளது எனலாம். மாநில அளவிலான கருத்துக்கணிப்புகள் எல்லாம் புதிய அரசு அமையும் என கருத்து வெளியீட்டு இருந்தன. அதன் படி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்று ஆருடம் கூறி இருந்தது. தற்போது அது நடந்தேறி வருகிறது.  எனினும் இன்று மாலையில் முடிவுகள் வெளியிட படும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)