மத்திய வேளாண் அமைச்சகத்தின் 2020-21 காலப்பகுதியில் முறையான வரவு-செலவு திட்டங்களுக்கு நிதியை முழுமையாக செலவிடாததால், நடப்பு நிதியாட்டிற்கான மதிப்பீடுகளில் இருந்து அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு அளவுகள் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டுக்கு ரூ.6000 நிதி நிறுத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் 2021-22-ல், வேளாண் அமைச்சகத்தின் கீழ் வேளாண் ஒத்துழைப்பு, விவசாய நலன் & வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை ஆகிய இரு துறைகளுக்கும் மொத்தம் ரூ.1,31,531.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நடப்பு ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளின் படி (1,42,762.35 கோடி ரூபாய்) நிதியை விடக் குறைவாக உள்ளது.
குறைவான நிதி ஒதுக்கீடு
வேளாண் ஆராய்சி மற்றும் கல்வித்துறைக்கு மட்டும் ஓரளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாட்டில் வேளாண் ஆராய்சி மற்றும் கல்வித்துறைக்கு ரூ.8,362 கோடி (BE 2020-21) ஒதுக்கப்பட்டிருந்தது. அது, வரும் நிதியாண்டில் (BE 2021-22) ரூ.8,513.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த துறைக்கு நடப்பு நிதியாண்டில் (BE 2020-21) 1,42,762.35 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வரும் நிதியாண்டில் (BE 2021-22) 10,000 கோடிக்கு மேல் குறைத்து 1,34,399.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.எம் கிசான் திட்டம் செயல்படும்
வேளாண் அமைச்சகத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய நிதி ஒதுக்கீடு குறைப்பாக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (பி.எம்-கிசான்) கீழ் ஒதுக்கப்பட்ட தொகை தான். 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர்-கிசான் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.75,000 கோடி ஒதுக்கியிருந்தது. இது 2020-21-ம் ஆண்டில் ரூ.65,000 கோடியாகக் குறைக்கப்பட்டது. இப்போது அடுத்த நிதியாண்டிலும் அதே அளவில் தக்கவைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 என மூன்று சமமான காலாண்டு தவணைகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
விவசாய கடன் இலக்கு அதிகரிப்பு
பட்ஜெட் தாக்கலின் போது, வேளாண் துறைக்கான் எந்தவொரு கூடுதல் சலுகையும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், “MSP, அனைத்து பொருட்களிலும் உற்பத்தி விலையை 1.5 மடங்கு விலையைக் குறைத்தது. கொள்முதலில் தொடர்ந்து சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது” என்று அமைச்சர் கூறினார். மேலும், வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாகவும், விவசாயக் கடன் இலக்காக 2021-22-ம் ஆண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்த்துவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும் படிக்க...
வேளாண் இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு! - மாற்று ஏற்பாடுகளை செய்ய விவசாயிகள் கோரிக்கை!!
மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன்! சந்தைப்படுத்தும் குழுக்களுக்கு அழைப்பு!
பயிர் காப்பீடு செய்ய அழைப்பு - திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!