வானியலாளரகள், விஞ்ஞானிகள், ஜோதிடரகள் என அனைவருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்வாக இருந்து வருகின்றது கிரகணம். 2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்த மாதத்தில் ஏற்படும்.
இந்த கிரகணத்தின் சில முக்கிய அம்சங்கள் இங்கே உள்ளன, அதாவது இந்த கிரகணம் எந்த நாளில் நிகழப்போகிறது, இது இந்தியாவில் காணப்படுமா அல்லது கிரகண காலம் என்ன என்பது போன்றவை இங்கே காணலாம்.
சந்திர கிரகணம் ஒரு வானியல் நிகழ்வு. அறிவியலின் படி, சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு நேர் கோட்டில் வரும்போது, சந்திரன் அதன் நிழலில் பூமியின் பின்னால் செல்கிறது. இது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இது நிலவில் நிகழ்கிறது. ஒரு வானியல் நிகழ்வு தவிர, சந்திர கிரகணம் ஜோதிடத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
இந்து நாட்காட்டிகள் மற்றும் ஜோதிட கணக்கீடுகளின்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வைகாசி மாதத்தின் பௌர்ணமி நாளான மே 26 அன்று நிகழும். இந்திய நேரப்படி மே 26 மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை சந்திர கிரகணம் இருக்கும்.
இந்திய நேரத்தின்படி, இந்த சந்திர கிரகணம் பகலில் நிகழ்கிறது, எனவே இது இந்தியாவில் தெரியாது . இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் எங்கும் காணப்படாது. இந்தியாவில் கிரகணங்கள் கணப்படாததால் வழக்கமான கிரகண சடங்குகள் தேவையில்லை என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
மே 26 அன்று சந்திர கிரகணம் ஜப்பான், சிங்கப்பூர், பங்களாதேஷ், தென் கொரியா, பர்மா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல், ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது.
இந்து பஞ்சாங்கத்தின் படி, மே 26 அன்று நடக்கவிருக்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தின் தாக்கம் விருச்சிக ராசி மீது நேராக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் மீதான தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் கிரகணத்தின் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க..
சூரிய கிரகணகனத்தை நேரலையில் காண இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஏற்பாடு