அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிஎம் போஜன் என்ற பெயரில் மதிய உணவு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் (Cabinet meeting)
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
புதிய திட்டம் (New project)
அப்போது, மத்திய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிஎம் போஜன் என்ற பெயரில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ. 1,30,795 கோடி திட்டம்
தற்போது பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் தேசிய மதிய உணவு திட்டத்திற்கு பதிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1,30,795 கோடி செலவிடப்பட உள்ளது என கூறினார்.
பிஎம் போஜன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 11.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிஎம் போஜன் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவர். 2021 - 22 நிதியாண்டு முதல் 2025 - 26 வரையிலான ஐந்து வருட காலத்திற்கு இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 54, 061 கோடியே 73 லட்சம் செலவிடும்.இதுதவிர உணவு தானியதுக்கான கூடுதல் செலவாக ரூபாய் 45 ஆயிரம் கோடியை மத்திய அரசே ஏற்கும்.
மொத்த பட்ஜெட் (Total budget)
மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூபாய் 31,733 கோடியே 17 லட்சம் செலவு ஏற்படும். ஏனவே இந்த திட்டத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 1, 30,794 கோடியாக இருக்கும்.
விரிவுபடுத்தப்படும் (Will be expanded)
அரசு மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் இயங்கும் மழலையர் வகுப்புகள் மற்றும் அங்கன்வாடிகள் வகுப்புகளுக்கு இத்திட்டம் பின்னர் விரிவு படுத்தப்படும்.மேலும், பள்ளிகளை ஊட்டச்சத்து தோட்டங்கள் ஏற்படுத்த அரசு ஊக்குவிக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இதைச் செய்தால் கொரோனா தீவிரமாகும், மரணமும் வரும்- ஆய்வில் தகவல்!
கொரோனாவுக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50,000: மத்திய அரசு தகவல்!