மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 September, 2020 3:48 PM IST

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 4000 ரூபாயை சேர்த்து பத்தாயிரம் ரூபாய் வழங்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM Kisan Samman Nidhi Yojana) கீழ், ஆண்டுக்கு 6000 ரூபாயை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாயாக 3 தவணைகளில் மத்திய அரசு விவசாயிகளுக்கு அவரவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. பல்வேறு புதுமைகளை படைத்து வரும் மத்திய பிரதேச அரசு கூடுதலாக 4 ஆயிரம் ரூபாயை சேர்த்து 10,000 ரூபாயாக விவசாயிகளுக்கு வழங்க உள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னர் பேசுகையில், மாநிலத்தில் 77 லட்சம் விவசாயிகளுக்கு 3 தவனைகளில் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாநிலத்தில் வங்கி கணக்கு உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ​​மத்தியப் பிரதேச அரசு விவசாயிகளின் நலனுக்காக ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், அவர்களுக்கு மாநில அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில் 2000 ரூபாய் அதாவது மொத்தம் ஆண்டுக்கு 4000 ரூபாய் கௌரவ நிதியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 10 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கான பயிர் கடன்களை பூஜ்ஜிய சதவீத வட்டி விகிதத்தில் (Zero Percent Interest Rate) வழங்கும் திட்டத்தையும் மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தைப் போல், முதலமைச்சர் கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கான தகல்களை விவசாயிகள் ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும் என ம.பி. மாநில தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெய்ன்ஸ் தெரிவித்தார். மேலும், பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் தகவல்கள் அனைத்தும் கிசான் சம்மான் நிதி போர்ட்டலில் பதிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க...

10 கோடி விவசாய வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணம்  

விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.5,000 வழங்கலாம் - CACP பரிந்துரை!!

தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

English Summary: Madhya pradesh govt will provide Rs.10,000 under PM Kisan scheme
Published on: 25 September 2020, 03:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now