மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா வந்தால் கைது செய்யப்படுவார், என மதுரை ஆதீனம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
292 ஆவது பீடாதிபதி (292nd Vice-Chancellor)
சைவ சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திருமடத்தின் 292 ஆவது பீடாதிபதி அருணகிரிநாத சுவாமிகள் அண்மையில் சிவலோகப் பிராப்தி அடைந்தார்.
293-வது ஆதீனம்
இதையடுத்து 293- வது ஆதீனமாக ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார்.
நித்தியானந்தா
முன்னதாக, மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதரால் அடுத்த வாரிசு என்று ஒரு காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நித்தியானந்தா, தானே அடுத்த மடாதிபதி என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆதீனம் எச்சரிக்கை
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற வ.உ.சி., சிலை திறப்பில் பங்கேற்ற ஆதீனம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நித்யானந்தா குறித்து கூறுகையில், அவன் ஒரு பொருட்டே இல்லை. மடத்திற்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்.
மதுரை ஆதீன மடத்தின் சார்பில், ஐந்து விருதுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த ஓதுவாருக்கு ஞானசம்பந்தர் விருது, சைவ சமயத்தில் சிறப்பாக செயல்படும் பெண்மணிக்கு மங்கையர்க்கரசி விருது, மடத்திற்கு வெள்ளி தேர் செய்து கொடுத்த பாண்டித்துரை தேவர் பெயரில் ஒரு விருது, தியாகத்திற்காக வ.உ.சி., விருது, மதுரை ஆதீனத்திடம் தீட்சை வாங்கிய வள்ளலார் பெயரில் ஒரு விருது வழங்க உள்ளோம்.
எந்நேரமும் மடத்திற்கு வந்தால் அன்னதானம் உண்டு. யார் வேண்டுமானாலும் மடத்திற்கு வரலாம். கதவுகள் திறந்தே இருக்கும். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுடன் நட்பு பாராட்டுவேன். மதநல்லிணக்கம் உடைய ஆதீன மாக இருக்க தயார். சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நுழையத் தடை (No entry)
இது தொடர்பான வழக்கில், 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவில், மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழையத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
ஒலிம்பிக்கில் சாதித்த விவசாயி மகன்: நீரஜ் சோப்ரா!
மனித குலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது ஐபிசிசி: பூமியின் வெப்பநிலை உயரும் அபாயம்!