News

Thursday, 25 April 2019 01:54 PM

டிக்-டாக்என்னும் செயலினை கடந்த 2016 ஆம் ஆண்டு  சீனா அறிமுகப்படுத்தியது. இந்த  செயலினை அனைத்து தரப்பினரும் அதிக அளவில் பயன் படுத்தினர். இந்த செயலி  சில ஆபாசமாகவும் இருப்பதாலும்இது  வன்முறையை தூண்டுவதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. நுற்றுக்கணக்கான பேர் தற்கொலை செய்து  கொண்டதன் எதிரொலியாக மதுரையை சேர்த்த ஒருவர் தடை செய்ய கோரி வழக்கு பதிவு செய்து இருந்தார். இதனை அடுத்து நீதிமன்றம் அதற்கு தடை  விதித்து உத்தரவிட்டிருந்தது.

டிக்டாக் நிறுவனம் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கினை விசாரித்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள்  பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றதிற்கு உத்தரவிட்டது. அவ்வாறு பதிலளிக்கவில்லை எனில் டிக்டாக் மீதான தடை நீக்கப்படும் என்றார்.

நேற்று இந்த வழக்கு நீதிபதிகள்முன்னிலையில் வந்ததுடிக்டாக் நிறுவனத்தின் சார்பில் ஐஸ்க் மோகன்லால்  என்பவர் வாதாடினார். அப்போது அவர் கூறுகையில், இந்த தடை விதிப்பினால் நூற்றுக்கு அதிகமானோர் நேரடியாகவும், ஆயிரத்திற்கு அதிகமானோர் மறைமுகமாகவும் வேலை இழக்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆபாசமாக இருந்த 5 மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும், முறையான கண்காணிப்பிற்கு  பிறகு வீடியோக்கள்  பதிவேற்றம் செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து தடை விலக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

டிக்டாக் நிறுவனம் சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவிட கூடாது என்ற நிபந்தனையுடன் அதன் மீதான தடையை விலக்கியது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)