பெட்டிக்கடையில் தொடங்கி சர்வதேச சந்தைகள் வரைக்கும் புகழ்பெற்றது மதுரை மல்லி. கிட்டத்தட்ட மதுரை மாவட்டத்தின் ஒரு அடையாளமாகவே திகழும் மதுரை மல்லியின் நிலையற்ற விலையினால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். ஏற்றுமதி செய்வதிலும் பல்வேறு பிரச்சினைகள் நீடிக்கும் நிலையில் அரசின் உதவியை நாடியுள்ளனர்.
ஒரு நாள் பார்த்தால் மதுரை மல்லியின் விலை கிலோ ஒன்றுக்கு 3,000 ரூபாய் வரை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விற்கும். அடுத்த ஒரிரு நாளில் மல்லிகையின் விலை கிலோவுக்கு 250 ரூபாய் வரை அதாள பாதாளத்திற்கு சென்றுவிடும். இந்நிலையில், மாவட்ட பூ ஏற்றுமதி வியாபாரிகள் மற்றும் மல்லிகைப்பூ விவசாயிகள், சந்தையில் விலையை நிலைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல தென் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 6,000 ஹெக்டேர் நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. சமீப காலமாகவே பூவின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய மல்லிகை விவசாயி மருதுபாண்டியன் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், அறுவடை முதல் மூட்டை வரை கைமுறையாக செய்யும் போது, நமது பாக்கெட்டில் இருந்து நேரமும் பணமும் செலவாகிறது. முஹூர்த்தம் மற்றும் சுப தினங்களில் விலை சீராக இருந்தாலும், மீதி நாட்களில் நல்ல விலை கிடைப்பதை விரல் விட்டு எண்ண வேண்டியதாக உள்ளது. கடந்த சில நாட்களாக, கிலோ 300 முதல் 500 வரை விலை போகிறது என்றார்.
முன்னதாக பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டாக்டர் என்.ஜெகதீசன் கூறியதாவது: ஏற்றுமதி அடிப்படையில், சர்வதேச சந்தைகளுக்கு தினமும், மூன்று டன்னுக்கும் அதிகமான பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழில்துறை கொள்முதல் தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாநில அரசின் மதுரை மிஷன் மல்லி திட்டத்தின் கீழ், ஆண்டு முழுவதும் மல்லி கிடைப்பதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
பூ ஏற்றுமதியாளரும், மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் விற்பனையாளர்கள் சங்கத் தலைவருமான எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது: மதுரை மல்லிக்கு உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, சர்வதேச சந்தைகளிலும் அதிக கிராக்கி உள்ளது. மல்லிகை ஏற்றுமதி வளர்ச்சிக்கு பூச்சி பிரச்சனைகள் மற்றும் தளவாடங்கள் பெரும் தடையாக உள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகை பெரும்பாலும் பூச்சிகளின் தாக்கத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்படுகிறது. பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தளவாட பிரச்சனைகள் சர்வதேச அளவில் அதிகரிக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல விமான சரக்கு சேவைகளை பயன்படுத்துவதற்காக சென்னை விமான நிலையம் அல்லது அண்டை மாநிலங்களில் உள்ள மற்ற சர்வதேச விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
pic courtesy: Thumbnail (pebbles Tamil)
மேலும் காண்க:
இந்த 6 தகுதி போதும்- 50 % மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க!