News

Friday, 05 March 2021 08:12 AM , by: Daisy Rose Mary

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகாவில் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மத்திய சுகாராத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 9,855 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளாவில் 2,765 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,73,413-ஐ எட்டியுள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.55 சதவீதம். மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோவிட்-19-19 சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று வரை, 1.66 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் 67,90,808 பேர், 28,72,725 சுகாதார பணியாளர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 58,03,856 முன்களப் பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 4,202 முன்களப் பணியாளர்கள் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 1,43,759 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,00,698 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 47வது நாளான நேற்று சுமார் 10 லட்சம் பேருக்கு (9,94,452) தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர், கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)