News

Wednesday, 04 September 2019 12:49 PM

மஹிந்த்ரா சம்மிட் அக்ரி சயின்ஸ் மற்றும் சுமிட்டோ கார்ப்ரேஷன், ஜப்பான் இணைந்து 'மஹிந்த்ராவின் பிரக்ரிதி' என்னும் புதிய பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது. வேளாண் துறையில் ஒரு நிலையான வளர்ச்சியும், இயற்கை விவசாயத்திற்கும் இது வழி வகை செய்யும் என கூறியுள்ளது.

நிலையான விவசாயத்திற்கு சாத்தியமான பல்லுயிர் அமைப்பு, ரசாயனம் இல்லா விவசாயம் போன்றவற்றை மஹிந்த்ரா நிறுவனம் தனது புதிய உற்பத்தியின் மூலம் வழங்க உள்ளது. இதில் தாவரங்களுக்கு தேவையான உயர்தரமான நுண்ணுயிர் ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை போன்ற அனைத்திற்கும் தீர்வு வழங்க உள்ளது. இதன் மூலம் நமக்கு சிறந்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதியயை அதிகரிக்கலாம்.

மஹிந்த்ரா அக்ரி சொலுஸ்யன் இயக்குநர், அசோக் சர்மா கூறுகையில்," நிலையான விவசாயத்திற்கு உதவும் வகையில் பொருட்களை அறிமுக படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் தயாரிப்பு மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் அதிக மகசூல் கிடைக்கவும் வழிசெய்யும் என்றார்".

உலக தரம் வாய்ந்த பயிர் மற்றும் பயிர் பாதுகாப்பு, அதற்கு தேவையான தரமான மண் அனைத்தையும் தருவதற்கான சூழலை அமைத்து கொடுக்கும் என்றார். புதிய தொழில் நுட்பம் விவசாகிகளின் வேளாண் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வாகும் மேலும் அவர்களின் வருமானம் அதிகரிக்க வழிவகுக்கும்.     

இந்தியாவை பொறுத்தவரை 40% விவசாய பொருட்கள் பூச்சிகள், புழுக்களால் பாதிக்கப்படுகின்றன. விவசாயம் நடைபெறும் நிலப்பரப்பு ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. எனவே குறைந்த நிலத்தில் தரமான பொருட்களை உற்பத்தி செய்யவதற்கு ஜப்பான் நிறுவனமும்,  மஹேந்த்ரா நிறுவனமும் இணைந்து செயல் படும் என்றார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)