க்ரிஷி ஜாக்ரான் மற்றும் Agriculture world இணைந்து மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (MFOI) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விவசாயிகளின் நம்பகமான மற்றும் இந்தியாவின் நம்பர் 1 டிராக்டர் நிறுவனமான ”மஹிந்திரா டிராக்டர்ஸ்” MFOI 2023 நிகழ்வுக்கான முதன்மை ஸ்பான்ஸராக இணைந்துள்ளது.
உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையிலும் வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 16 பிரிவுகளில் விவசாயிகள்/மீனவர்கள்/ கால்நடை பராமரிப்பாளர்கள் என பலரும் இந்தியா முழுவதுமிருந்து விருதுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
Title Sponsorship: மஹிந்திரா டிராக்டர்ஸ்
வருகிற டிசம்பர் மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் MFOI விருது வழங்கும் விழாவுடன், வேளாண் கண்காட்சியும் நடைப்பெற உள்ளது. இதனிடையே, விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்துள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் அசைக்க முடியாத நம்பர் 1 டிராக்டர் பிராண்டாகவும், உலகிலேயே அதிகமாக டிராக்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது. 40-க்கும் மேலான நாடுகளில் செயல்பட்டுவரும் மஹிந்திரா, டெமிங் விருது மற்றும் ஜப்பானிய தர பதக்கம் ஆகிய இரண்டையும் வென்ற உலகின் ஒரே டிராக்டர் பிராண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான சூழலுக்கு நடுவே வருவாயை இரட்டிப்பாக்கியது மட்டுமின்றி, தங்களது இடைவிடாத முயற்சியால் கோடீஸ்வரர்களாகவும் பரிணமித்துள்ள இந்திய விவசாயிகளின் முயற்சிகளையும், அவர்களின் புதுமையான விவசாய நடைமுறைகளையும் அங்கீகரிக்க 2023 ஆம் ஆண்டுக்கான மஹிந்திரா டிராக்டர்ஸ் மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது தயாராகி உள்ளது.
“மஹிந்திரா டிராக்டர் எங்களது டைட்டில் ஸ்பான்சராக இணைந்ததில் நான் பெருமைப்படுகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு MFOI தொடர்பான கனவினை கண்டேன். அதை நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ள மற்றும் நம்பகமான ஒருவர் எனக்குத் தேவை என்று நான் நினைத்தேன். இன்று கனவினை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளின் நம்பகமான பிராண்டுடன் கைக்கோர்த்துள்ளோம் ”என்று கிரிஷி ஜாக்ரன் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்ட் நிறுவனர் & தலைமை ஆசிரியரான எம்சி டொமினிக் தெரிவித்து உள்ளார்.
கிரிஷி ஜாக்ரானின் நிர்வாக இயக்குனர், ஷைனி டொமினிக் தெரிவிக்கையில் "உண்மையான ரத்தினங்களை கண்டறிவதில் எப்போதும் கைத்தேர்ந்தவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய விவசாயிகளுக்கான ஆஸ்கார் விருதுகளாக மஹிந்திரா டிராக்டரின் க்ரிஷி ஜாக்ரான் MFOI விருதுகள் திகழும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
இதையும் காண்க:
MFOI 2023- வேளாண் கண்காட்சியில் பங்கேற்க முன்பதிவு செய்வது எப்படி?