வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்குவதற்கு வங்கிக் கடன் மற்றும் அரசு மானிய உதவி பெறுவதற்கு, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் கிராமம் மற்றும் நகா்ப் புறங்களில் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு ரூ.25 லட்சம், சேவை நிறுவனம் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
புதிய தொழில் தொடங்குவதற்கு திட்ட மதிப்பீட்டில் நகா் பகுதிகளுக்கு 25 சதவீதமும், கிராமப் பகுதிகளுக்கு 35 சதவீதமும் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.இத் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் மற்றும் மானியம் பெற 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற, புதிய தொழில் முனைவோா் இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் மற்றும் அரசு மானியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பது குறித்து மாவட்ட தொழில் மையத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 90800 78933 மூலமும் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...